சென்னையின் இந்த பகுதிகளுக்கு நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது

நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 25-ந்தேதி காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இந்த நேரத்தில் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பகுதி 9 மயிலாப்பூர், மந்தைவெளி பொறியாளர் செல்போன் எண் 81449-30909, பகுதி 13 அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30913, பகுதி 14 கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பொறியாளர் செல்போன் எண் 81449-30914, பகுதி 15 ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30915 தொடர்பு கொண்டு பயனடையலாம். மேற்கண்ட தகவல்களை சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools