பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக தற்காலிகமாக சினிமாவுக்கு ஓய்வு கொடுத்துள்ளார். மேலும் இவர் சென்னைக்கு குடியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, கடந்த ஆண்டு அமீர்கானின் தாயார் ஜூனத் ஹூசைனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பினார். தற்போது அவருக்கு மீண்டும் சிகிச்சை தேவைப்படும் நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அதனால் தாயாரை உடனிருந்து கவனிக்கும் வகையில், மருத்துவமனைக்கு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சில மாதங்கள் அங்கு தங்கியிருக்கவும் அமீர்கான் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.