செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என்ற வாதத்தை ஏற்கிறோம். அந்த வகையில் புதிய கட்டுப்பாடு தேவையில்லை என நீதிபதிகள் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி அமைச்சராகவோ அல்லது எந்த அரசு பதவிகளும் வழங்கக்கூடாது. டெல்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும். பண மோசடி வழக்கில் விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும். செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில்,”அமலாக்கத்துறையின் வழக்கு முடிய 15 ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை எந்த பதவியும் வகிக்கக் கூடாதா? மீண்டும் அமைச்சராக முடியாது என உச்சநீதிமன்றம் கூற அதிகாரம் இல்லை” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், ” லஞ்ச வழக்கில் விசாரணை முடியாமல் பண மோசடி வழக்கு விசாரணையை எப்படி தொடங்க முடியும் ? செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றால் அவரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்று நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.