Tamilசெய்திகள்

செங்கல்பட்டு அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் செங்கல்பட்டு அருகே வந்தபோது திடீரென தடம் புரண்டது. 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. அதை சீர்செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த விபத்து காரணமாக ரெயில்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரெயில்கள் சிங்கம்பெருமாள் கோவில் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரெயில்கள் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

தென்மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் நேரத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.