X

சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மரணம்!

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் (வயது 64). இவர் இன்று காலை தனது வீட்டில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட அதிமுகவில் மிக முக்கியமான தலைவரான கனகராஜ், மறைவு அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்படுகிறது. முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: south news