Tamilசினிமா

‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் விரைவில் அறிவிப்பு – தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்ட தகவல்

‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தில் ‘சீதா ராமம்’ படத்தில் நடித்த மிருணாள் தாகூர் குறிப்பிட்ட காட்சிகளில் நடிக்கவுள்ளதாகவும் படத்திற்கு ‘வீர்’ என படக்குழு தலைப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி பரவி வந்தது. இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் ‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.