சூர்யா மிகவும் மரியாதைக்குரியவர் – நடிகை கீர்த்தி ஷெட்டி பாராட்டு
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி ‘உப்பென்னா’ படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘தி வாரியர்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி, சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது நடிகர் சூர்யா பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் மரியாதைக்குரியவர் அவர் தான் என்று கீர்த்தி ஷெட்டி பதிலளித்துள்ளார்.