சூர்யா, ஜோதிகா பற்றி அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் அளித்த ரசிகர்கள்

நடிகர் சூர்யா சமீபத்தில் நீட் தேர்வு பற்றி கருத்து தெரிவிக்கையில் நீதிமன்றம் பற்றி அவதூறு தகவல்களை வெளியிட்டதாக புகார் எழுந்தது. சூர்யாவின் கருத்தை நீதிமன்ற அவமதிப்பாக கருத சென்னை ஐகோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. இது பற்றிய பரபரப்பு அடங்கிய வேளையில், நேற்று அகில இந்திய தலைமை சூர்யா நற்பணி இயக்க நிர்வாகிகள் சிலர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தனர்.

அந்த புகாரில், ‘நாங்கள் மிகவும் மதிக்கும் அண்ணன் சூர்யா பற்றியும், அவரது மனைவி நடிகை ஜோதிகா பற்றியும், முகநூல் பக்கம் ஒன்றில் தொடர்ந்து அவதூறு தகவல்களும், தரக்குறைவான தகவல்களும் வெளியாகி வருகிறது. இதை கேட்டு நாங்கள் வருத்தம் அடைந்துள்ளோம்.

சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் பற்றியும் அவதூறு தகவல்கள் அந்த முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவதூறு தகவல்கள் வெளியிட்டவர் சினிமா இயக்குனர் ஒருவர் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools