X

சூர்யா சாருக்கு டப்பிங் பேசியது புதிய அனுபவமாக இருந்தது – நடிகர் நரேன்

சூர்யா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படம் தமிழ் மொழியில் பெற்ற அதே வரவேறப்பை மலையாளத்திலும் பெற்றுள்ளது. மலையாளத்தில் சூர்யாவுக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பவர் நடிகர் நரேன். அந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, ‘மிகப் பெரிய ஸ்டாரான சூர்யா சாருக்கு குரல் கொடுப்பதில் பெருமிதமடைகிறேன். பெரும் வெற்றி பெற்ற ‘சூரரைப்போற்று’ படத்துக்கும் நான் தான் டப்பிங் பேசினேன்.

‘ஜெய்பீம்’ படத்துக்கும் டப்பிங் பேச அழைத்தபோது ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் நினைத்த மாதிரி இல்லாமல் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. சூர்யா சாரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மிக நுட்பமாக இருந்ததால் பிரேம் பை பிரேம் கவனித்து பேசியது புது அனுபவமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த அனுபவம் சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. மலையாளத்தில் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு அளித்த சிபு பற்றும் ஜாலி ஆகியோருக்கு நன்றி’ என்றார்.