Tamilசினிமா

சூர்யாவுக்கு சிறப்பு பரிசு வழங்கிய கமல்ஹாசன்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு கார் பரிசாக வழங்கினார். அதன்பின் விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கை கமல் பரிசளித்தார்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கமல் பரிசளித்துள்ளார்.

இது குறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து சூர்யா நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.