சூர்யாவின் 37வது படத்திற்கு தலைப்பு வைக்க ரசிகர்களிடம் உதவி கேட்கும் கே.வி.ஆனந்த்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சிரக் ஜனியும் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு தலைப்பு தேடி வருகிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று தலைப்புகளை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ரசிகர்களிடையே வாக்கு கேட்டிருக்கிறார். இதில் ‘உயிர்கா’ என்ற தலைப்பிற்கே அதிக வாக்குகள் கிடைத்து வருகிறது. எனவே ‘உயிர்கா’ என்ற தலைப்பே படத்திற்கு வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools