`என்.ஜி.கே’, காப்பான் படங்களை தொடர்ந்து சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை துவங்கிய விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா ஜேடியாக நடித்து வரும் அபர்ணா பாலமுரளி தனது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அபர்ணா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூரரைப் போற்று முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டேன், இந்த செட்டில் உள்ள அனைவருமே அன்பாக உள்ளார்கள். இரும்பு பெண் சுதா மேடம் போன்று யாருமில்லை. மற்றும் அந்த முக்கியமான நபர், அவரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
பிரபல தொழில் அதிபரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. இதில் கோபிநாத்தின் மனைவி பார்க்கவியின் கதாபாத்திரத்தில் அபர்ணா நடித்து வருகிறார். பார்ப்பதற்கு பார்கவி போலவே இருப்பதால் அவரை இந்த படத்திற்கு தேர்வு செய்துள்ளார்கள்.
சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியவர் ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.
2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.