சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ’சூரரைப் போற்று’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ’சூரரைப் போற்று’படத்தின் டிரைலர் மிக விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிரைலரின் ரன்னிங் டைம் ஒரு நிமிடம் 52 வினாடிகள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
’சூரரைப் போற்று’திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளி வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.