சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.சி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். அவர் 2-வது சுற்றில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமாவர்தானியிடம் 15-21, 21-12, 18-21 என்ற செட் கணக்கில் தோற்றார்.
ஏற்கனவே இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரனாய், மிதுன், மஞ்சுநாத் ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தோற்றனர். இதன் மூலம் சுவிஸ் ஓபன்பேட்மின்டனில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. தைவானின் பாங்சிக்லீ-ஜென் லீ ஜோடியை 12-21, 21-17, 28-26 என்ற கணக்கில் கடுமையாக போராடி வென்று கால் இறுதிக்கு இந்திய ஜோடி முன்னேறியது.
சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதியில் டென்மார்க்கின் ஜெப்பே பே-லாஸ்சே மோல் ஹெடே ஜோடியுடன் மோதுகிறது.