சுவிஸ் ஓபனின் சாம்பியன் பட்டம் பெற்ற பி.வி.சிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தனது ஆதிக்கம் மிகுந்த அபார ஆட்டத்தால் சுவிஸ் ஓப்பன் 300 இறகுப் பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி.சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ளச் செய்துள்ளார். இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும். அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவித்து நமது இளைஞர்களுக்கு உந்து விசையாக விளங்க எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools