சுல்தான் ஜோகூர் கோப்பைக்கான ஆக்கி போட்டி தொடர், மலேஷியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் கேப்டன் உத்தம் சிங் தலைமையிலான இந்திய ஜூனியர் ஆக்கி அணி பங்கேற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கேப்டன் உத்தம்சிங், ரோகித்,ஜான்சன்,பூர்டி, பாபி சிங் தாமி,அமந்தீப் லக்ரா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பதிலுக்கு ஜப்பான் தரப்பில் இக்குமி சாகி ஒரு கோல் அடித்தனர்.
ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்திய ஜூனியர் ஆக்கி அணி தனது நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது.