மலேசியாவில் 9-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியாவை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் முதலில் கோல் அடித்து இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. இறுதியில், சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்றாவது முறையாக சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.