சுபாஷ் சரந்திரபோஸுக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும் – பிரதமர் மோடி

சுதந்திரப் போராட்ட வீரர் ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோசின் 123வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

‘ஜனவரி 23, 1897 அன்று, சுபாசின் தந்தை ஜனகிநாத் போஸ் தனது நாட்குறிப்பில், ‘மதியவேளையில் ஒரு மகன் பிறந்தான்’ என்று எழுதினார். அந்த மகன் (சுபாஷ் சந்திரபோஸ்) ஒரு வீரம் மிக்க சுதந்திரப் போராளியாகவும், சிந்தனையாளராகவும் ஆனார், அவர் தனது வாழ்க்கையை ஒரு பெரிய லட்சியத்திற்காக அர்ப்பணித்தார், அதுதான் இந்தியாவின் சுதந்திரம். மேலும் சக இந்தியர்களின் முன்னேற்றத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் அவர் போராடினார்’, என நேதாஜியைப் பற்றி மோடி கூறினார்.

காலனித்துவத்தை எதிர்ப்பதில் சுபாஷ் சந்திரபோஸின் துணிச்சலுக்கும், நிலையான பங்களிப்பிற்கும் இந்தியா எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools