Tamilசினிமா

சுனைனா நடிக்கும் ரெஜினா பட இசை வெளியீட்டு விழா – இயக்குநர் வெங்கட் பிரபு பங்கேற்பு

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ரெஜினா”. இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து “ரெஜினா” படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 5-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட் பிரபு கலந்து கொள்ளவுள்ளார் என்பதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.