கலப்பு அணிகளுக்கு இடையிலான 18-வது சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவில் உள்ள சுசோவ் நகரில் அடுத்த மாதம் (மே) 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. மலேசியா, சீன தைபே, ஆஸ்திரேலியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
சுதிர்மன் கோப்பை போட்டிக்கான இந்திய பேட்மிண்டன் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணி வருமாறு:-
ஆண்கள் ஒற்றையர்: எச்.எஸ்.பிரனாய், ஸ்ரீகாந்த் (மாற்று வீரர் லக்ஷயா சென்),
பெண்கள் ஒற்றையர்: பி.வி.சிந்து, அனுபமா உபத்யாயா (மாற்று வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப்).
ஆண்கள் இரட்டையர்: சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா,
பெண்கள் இரட்டையர்: காயத்ரி கோபிசந்த்-திரீஷா ஜாலி, அஸ்வினி-தனிஷா கிரஸ்டோ,
கலப்பு இரட்டையர்: தனிஷா கிரஸ்டோ-சாய் பிரதீக்.