இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நேதன்யாகு. மக்களின் போராட்டத்தை அடுத்து புதிய நீதித்துறை சீர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நேதன்யாகு ஒப்புதல் அளித்தார்.
இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டில் 75-வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சுதந்திர தினம் கொண்டாடும் இஸ்ரேல் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாளில் எனது நண்பர் பெஞ்சமின் நேதன்யாகுவிற்கும், இஸ்ரேல் மக்களுக்கும் எனது இதயபூர்வமான சுதந்திர தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.