சீனியர் அமைச்சர் குறித்து கருத்து சொல்ற உரிமை எனக்கு கிடையாது – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் நீடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி கேசுவலாக பேசி இருக்கலாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

வேண்டுமென்றே எதுவும் பேச மாட்டோம். பேச்சுவாக்கில் Slip ஆகி இருக்கும். சீனியர் அமைச்சர் குறித்து கருத்து சொல்ற உரிமை எனக்கு கிடையாது. பொன்முடி மீதான நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools