Tamilசெய்திகள்

சீனா விமானம் விபத்து – பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக அறிவிப்பு

 

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு நேற்று சென்றபோது விபத்துக்குள்ளானது.

அந்த விமானத்தில் மொத்தம் 133 பேர் இருந்ததாக முதலில் தகவல் வெளியானது. தற்போது 123 பயணிகள் மற்றும் 9 பணியாளர்கள் உட்பட 132 பேர் இருந்ததாக சீன விமான போக்குவரத்துத்துறை
தெரிவித்துள்ளது.
குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைபகுதியின் மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொருங்கியது.

இதனால் ஏற்பட்ட தீ அந்த பகுதியில் பரவியது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினருடன் விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தீ கட்டுக்குள்
கொண்டு வரப்பட்டதை அடுத்து, அங்கு கிடந்த இடிபாடுகளுக்குள் விமான பாகங்களை கண்டறியும் முயற்சியில் மீட்பு குழு ஈடுபட்டது.

எனினும் பலத்த காற்று மற்றும் போதிய வெளிச்சமின்மையால் தேடுதல் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரின் நிலை என்ன என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனால் விமானத்தில் பயணித்த அனைவரும்
இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தில் வெளிநாட்டினர் யாரும் பயணிக்கவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.