சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் கடந்த 4 மாதங்களாக சீனாவுக்கு எதிராக போராட்டம், பேரணி நடந்து வருகின்றன. கடந்த 6-ந் தேதிக்கு பிறகு போராட்டங்கள் எதுவும் நடக்காதநிலையில், நேற்று மீண்டும் பேரணி நடந்தது.கவ்லூன் நகரில் நடந்த பேரணியில், முந்தைய போராட்டங்களை விட மிகக்குறைவாக, வெறும் 2 ஆயிரம்பேர் மட்டுமே பங்கேற்றனர்.
அவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல், கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். கவ்லூன் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் சிலர் மதுபாட்டில்களை வீசிச் சென்றனர். அதில் யாரும் காயமடையவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபோல், ஹாங்காங் போலீஸ் தலைமையகம் முன்பு ஓய்வூதியர்கள் 200 பேர் அமைதியாக போராட்டம் நடத்தினர்.