சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுகிற பெண்கள், வாடிக்கையாளர்கள் பிடிபடுகிறபோது அவர்கள் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கல்விமையம் என்று அழைக்கப்படுகிற காவல் மையங்களில் அடைக்கப்பட்டு வந்தனர். அங்கு அவர்கள் பொம்மைகள், வீட்டு வசதி சாதனங்கள் செய்கிற பணியில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
இந்த தண்டனை முறையை சீனா முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. தற்போது காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள்.
அதே நேரத்தில் பாலியல் தொழில் இனியும் சட்ட விரோதமான தொழிலாகவே நீடிக்கும்.
இந்த குற்றத்தில் ஈடுபடுகிறவர்களும், வாடிக்கையாளர்களும் இனி 15 நாள் காவலில் வைக்கப்படுவார்கள். 5,000 யென் (சுமார் ரூ.51 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு அமலுக்கு கொண்டுவரப்பட்ட 2 ஆண்டு காவலில் கட்டாய பணியில் ஈடுபடுத்தும் முறை, நல்ல சமூக சூழ்நிலையையும், பொது ஒழுங்கையும் பராமரிக்க உதவியதாக சீன அரசு ஊடகம் கூறுகிறது.
ஆனால் இப்போது மாறி வரும் காலச்சூழலில் இது பொருத்தமானதாக இல்லாமல் போய்விட்டதாகவும் அதே சீன அரசு ஊடகம் கூறுகிறது.