சீனாவில் பரவும் புதிய வைரஸ்! – இந்திய விமான நிலையங்களில் பரிசோதனை

சீனாவில் கொரோனா வைரஸ் என்ற ஒரு வகை நச்சு கிருமி வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ளவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் கடுமையான சுவாச கோளாறு ஏற்பட்டு உயிருக்கும் ஆபத்து எற்படுகிறது.

இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மாமிசம் சாப்பிட வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

சீனாவுக்கு பயணம் செய்பவர்கள் அங்கு உடல் நலமின்றி இருப்பவர்கள், ஜலதோ‌ஷம், சளி ஒழுகும் மூக்குடன் இருப்பவர்களின் அருகில் போக வேண்டாம்.

மேலும் சீனா சென்று திரும்பும் அல்லது சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் மருத்துவ சோதனை நடத்தும் படி மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து கோவை சுகாதார நல பணிகள் துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் கூறியதாவது-

கோவை விமான நிலையத்தில் நிரந்தரமாக சிறப்பு குழுவினர் வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடம் கொரோனா வைரஸ் குறித்து பரிசோதனை மேற் கொள்வார்கள்.

கோவைக்கு சீனாவில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவு இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை மேற் கொள்ளப்படுகிறது.

இது வரை இந்த பாதிப்புடன் யாரும் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools