Tamilசெய்திகள்

சீனாவில் கன மழை – 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷாங்க்சி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் அங்குள்ள சுமார் 80 நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.
இந்நிலையில், தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஷாங்க்சி மாகாணத்தில் இருந்து சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரிலுள்ள ஆற்றை பாலத்தில் கடக்க முயன்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 2 பேர் பலியாகினர்.