Tamilசெய்திகள்

சீனாவில் ஓடுதளத்தில் நின்ற விமானம் தீப்பற்றி நாசமானது

சீனாவின் சாங்கிவிங் விமான நிலையத்தில் திபெத்திய ஏர்லைன் நிறுனத்தை சேர்ந்த விமானம் ஒன்றும் பறப்பதற்காக ஓடுதளத்தில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாங்கிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாசாவிற்கு செல்ல இருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விமானத்தில் 113 பயணிகளும், 9 விமான பணியாளர்களும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

ஒருசிலருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.