சீனாவில் அதிகரிக்கும் நிமோனியா பாதிப்பு – பயணிகளுக்கு தடை விதிக்க அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்
சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் அதிகரித்து வருதால், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது. நிமோனியா தொற்று அதிகரித்து வருவதால் பல மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்கா-சீனா இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்குமாறு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக மார்கோ ரூபியோ தலைமையிலான குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஜோபைனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் சீனாவில் இதுவரை அறியப்படாத சுவாச நோய் பரவி வருவால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான பயணத்தை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பொது சுகாதார நெருக்கடிகள் பற்றி பொய் சொல்வதில் சீன அரசு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.
கொரோனா தொற்றின்போது உண்மையை சீனா மறைத்தது. உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. அமெரிக்கர்களின் ஆரோக்கியத்தையும் நமது பொருளாதாரத்தையும், பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளனர்.