சீனாவில் அதிகரிக்கும் சுவாச பாதிப்பு எதிரொலி – மாநில சுகாதாரத்துறைகளை எச்சரித்த மத்திய சுகாராத்துறை

சீனாவில் சில வாரங்களாக குழந்தைகள் இடையே சுவாச பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால் மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஞாயிற்று கிழமை அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியது. அதில், இந்தியாவில் நிலைமை ஆபத்து ஏற்படும் வகையில் இல்லை என்றும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், இந்தியாவிலும் பல்வேறு காரணங்களால் சுவாச கோளாறுகள் அதிகரித்து வருவதால், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட், அரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகள், சுவாசக் கோளாறு பாதிப்பால் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பருவகால காய்ச்சல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், பருவகால காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகளை பட்டியலிட்டு, ஆலோசனையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், இருமல் அல்லது தும்மலின்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது மற்றும் நெரிசலான இடங்களில் முகமூடிகளைப் பயன்படுத்துவது ஆகியவை அடங்கும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools