X

சீனர்களுக்கு மேலும் விசா கட்டுப்பாடுகளை விதித்த டிரம்ப்

அமெரிக்கா – சீனா இடையை மோதல் போக்கு நீடித்து வருகிறது. கொரோனா வைரசை பரப்பியதால் சீனா மீது குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

அமெரிக்காவில் உளவு பார்த்ததாக கூறி சீன தூதரகத்தை மூடியது. அதுபோல் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க தடை விதித்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்தது.

மேலும் கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு விசா தடை விதித்தது.

இந்த நிலையில் சீனர்களுக்கு மேலும் விசா கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது.

சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஐக்கிய முன்னணி பணித்துறை உடல் ரீதியாக வன்முறை, திருட்டு, தனியார் தகவல்களை வெளியிடுதல், உளவு, நாசவேலை தீங் கிழைக்கும் தலையீடு ஆகிய வற்றில் ஈடுபட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.