X

“சிவோகம்” பாடலின் வீடியோவை வெளியிட்ட ‘பொன்னியின் செல்வன் 2’ குழு

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28- ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற சிவோகம் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சத்யபிரகாஷ், டாக்டர் நாராயணன், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், நிவாஸ்,  அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சென்பகராஜ், டிஎஸ் ஐயப்பன் ஆகியோர் பாடியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

Tags: tamil cinema