X

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியானது

மத்திய அரசு துறைகளில் உள்ள பல்வேறு அதிகாரிகள் பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்பட 829 இடங்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல் நடைபெற்றது. இதன் முடிவுகளை யுபிஎஸ்சி இன்று வெளியிட்டது. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தில் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம் பெற்றார். இவர் அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் உள்ளார்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அப்போது மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு காலியாக உள்ள உயர் பதவிகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.