X

சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்

சிவராத்திரியையொட்டி தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிதம்பரம், தஞ்சை, நெல்லை உள்ளிட்ட முக்கிய சிவாலயங்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.

கோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய ஆடல், பாடல், நடனம் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் சிவராத்திரி விழா உற்சாகமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஆதியோகி சிலை முன்பு லட்சக்கணக்கானோருடன் சிவராத்திரி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காஜல் அகர்வால் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் இதில் கலந்து கொண்டனர். காஜல் அகர்வால் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.