சிவகார்த்திகேயன் படத்திற்கு தயாராகும் யுவன் சங்கர் ராஜா!
`மிஸ்டர்.லோக்கல்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இது அவரின் 15-வது படம் என்பதால், எஸ்.கே.15 என்று தற்போது அழைத்து வருகிறார்கள். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தற்போது இப்படத்தின் இசையமைக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இதை தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.