சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்திற்கு யு சான்றிதழ்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு `யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தமிழகமெங்கும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.

காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools