சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக அபய்குமார் சிங் நியமனம்!

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்து வந்தார். அவருடைய பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

சிலை கடத்தல் தொடர்பான பல வழக்குகளை சிறப்பாக விசாரித்து வருவதால் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்று பணி ஓய்வு பெறுவதால் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அபய்குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அபய்குமார் சிங் தமிழ்நாடு நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools