சிலி நாட்டில் நிலநடுக்கம்! – மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள்
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டில் உள்ள கோகியும்போ கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், 53 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.