Tamilசெய்திகள்

சிறையில் இருக்கும் நவாஸ் செரீப்பின் உடல் நிலை மோசமானது!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த மாதம் 24-ந் தேதி தீர்ப்பளித்தது.

இதையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

நவாஸ் செரீப்புக்கு இதய நோய் பாதிப்பு இருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்குப் பின் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நவாஸ் செரீப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாக அவரது டாக்டரும், இருதய நோய் நிபுணருமான அட்னன் கான் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நவாஸ் செரீப்பின் இருதய நோய் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது. சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது. எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நவாஸ் செரீப்பை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என்று ஏற்கனவே மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரையை அரசு ஏற்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *