சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்யும் பெண்களுக்கு கடன் உதவி – மத்திய இணை அமைச்சர் தகவல்
பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தெரிவித்துள்ளதாவது:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது. இவற்றுள், அவசரக் கடன் உதவித் திட்டத்தின்கீழ், ரூ.5 லட்சம் கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான கால அளவு 31.03.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெருவோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டம், இலவசக் கடன் உதவியை எளிதாக்குகிறது.
கடன் உத்தரவாத திட்டம், கடன் வழங்கும் முறையை எளிதாக்குதல், எளிதாக்கவும், பிணையத்தொகை மற்றும் இடைத்தரகர் உள்ளிட்ட பிரச்சினைகளின்றி அதிகபட்சமாக ரூ.200 லட்சம் வழங்கப்படுகிறது. 03.08.2022 அன்றைய நிலவரப்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் இணையப்பக்கத்தில், மகளிரால் பதிவு செய்யப்பட்ட 17,96,408 தொழில் நிறுவனங்கள் உள்ளன.
2008-09-ம் ஆண்டில், பிரதமரின் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 02.08.2022 வரை, மொத்தம் 2, 50, 319 பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. 2000-ம் ஆண்டில், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 30.06.2022 அன்றைய நிலவரப்படி, மொத்தம் 11,92,689 மகளிருக்கு கடன் உத்தரவாதத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.