பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியதன் பின், தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் காரணமாக மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒமைக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தியுள்ளது. தற்போது வரை 3 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 5 முதல் 11 வயதிற்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்மூலம் பிரிட்டனில் சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. ஐந்து வயது முதல் 11 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறுவர்களுக்கு நேர்மறையான பயன் அளிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக பிரிட்டன் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 1,06,122 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.