சிறுவனை கடித்த வளர்ப்பு நாய் – கண்டுக்கொள்ளாத உரிமையாளர் மீது வழக்குப் பதிவு

உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ராஜ்நகர் விரிவாக்கத்தில் வீட்டு வசதி வாரிய கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு, குடியிருக்கும் பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை லிஃப்டில் அழைத்து சென்றுள்ளார். அந்த லிஃப்டில் ஏற்கனவே சிறுவன் ஒருவன் இருந்துள்ளான்.

அந்த சிறுவன் தனது இறங்கும் தளம் வருவதை அடுத்து, லிஃப்டின் கதவு அருகே வந்தான். அப்போது, அங்கிருந்த நாய் சீறிப்பாய்ந்து சிறுவனின் காலை கடித்துவிட்டது. இதனால் சிறுவன் வலியால் துடி துடித்து காலை உதறி கத்தினான். நாயை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்ட அந்த பெண், சிறுவன் வலியில் கதறுவதை பொருட்படுத்தாமல் மனிதாபிமானமின்றி இருந்தார். இந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பெண் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வலியால் துடித்துக் கொண்டிருந்த சிறுவனை கண்டுகொள்ளாமல் இருந்த பெண்ணை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools