X

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பிறகு முழு ஆற்றலுடன் பேட் மிண்டன் விளையாடிய லாலு பிரசாத் யாதவ்

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோய் உள்ளது.

இதன் காரணமாக அவருடைய உள் உறுப்புகள் பலவும் பாதிக்கப்பட்டு உள்ளன. சிறுநீரகமும் மோசமாக பாதிக்கப்பட்டது. அவருடைய சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாற்று சிறுநீரகம் பொருத்துவதும் இப்போது சரியாக இருக்காது என்றும் கூறினர்.

பின்னர், மேற்சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற லாலுவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது மகள் ரோகினி ஆச்சார்யா தந்தை லாலுவுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.

அறுவை சிகிச்சை முடிந்து 6 மாதங்கள் ஆன நிலையில், லாலு பிரசாத் யாதவ் நேற்று முழு ஆற்றலுடன் பேட்மிண்டன் விளையாடும் காட்சி காண்போரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: tamil news