சிறந்த வீரருக்கான விருது பெரும் இந்திய ஹாக்கி அணி கேப்டன்
தேசிய விளையாட்டு சங்கத்தினர், ஊடகத்தினர், ரசிகர்கள், வீரர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் மன்பிரீத்சிங் 35.2 சதவீத வாக்குகள் பெற்று விருது பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு போட்டியாக இருந்த ஆர்தர் வான் டோரன் (பெல்ஜியம்) 19.7 சதவீத வாக்குகளும், லுகாஸ் வில்லா (அர்ஜென்டினா) 16.5 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
இந்த விருது 1999-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கவுரவமிக்க இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பை மன்தீப்சிங் பெறுகிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணியை தகுதி பெற வைத்ததில் முக்கிய பங்காற்றிய 27 வயதான நடுகள வீரரான மன்பிரீத்சிங் இதுவரை 260 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கிறார். 2012 மற்றும் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கிலும் பங்கேற்றுள்ளார்.