சிறந்த வங்கி தலைவர் பட்டியல் – ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்த ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பிரதமர் மோடி பாராட்டு

அமெரிக்காவைச் சேர்ந்த ‘குளோபல் ஃபைனான்ஸ்’ என்ற நிதி விவகாரங்கள் சார்ந்த இதழ், பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி இலக்குகள், செலாவணி ஸ்திரத்தன்மை, வட்டி விகித மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகளில், தங்களது உத்திகளின் மூலம் அடைந்த வெற்றியின் அடிப்படையில் உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில், மிகச்சிறந்த செயல்பாட்டுக்கான ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளார். சக்திகாந்த தாஸை அடுத்து, ஸ்விட்சர்லாந்து மத்திய வங்கி ஆளுநர், வியட்நாம் மத்திய வங்கித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news