சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகர் அல்லு அர்ஜுன்
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் ‘புஷ்பா’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.