சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று‘. சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது.
இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சூர்யா சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறந்த படமாக சூரரைப்போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதைக் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் சிறந்த நடிகையாக தி பேமிலி மேன் வெப்தொடருக்காக சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.