சிறந்த சுழற்பந்து வீச்சாளரான சாஹலை புறக்கணிப்பது ஏன்? – ஹர்பஜன் சிங் கேள்வி

டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. இந்திய அணி சரியான அணியை தேர்வு செய்வதற்கான சோதனையில் இறங்கிவிட்டது.

சுழற்பந்து வீச்சாளர்களில் பிஷ்னோய், அக்சார் பட்டேல், ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு சிறந்த நபரை தேர்வு செய்ய இருக்கிறது. ஆனால் டி20-யில் சிறப்பாக பந்து வீசும் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளரான சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் ஏன்ற புறக்கணிக்கப்படுகிறார் எனத் தெரியவில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

சுழற்பந்து வீச்சு என்று வந்தாலே, நான் சாஹலைத்தான் முதலில் தேர்வு செய்வேன். அவர் புறக்கணிக்கப்படுகிறார். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இன்றைய நாளில் கூட, சிறந்த லெக் ஸ்பின்னர் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சாஹலை விட தைரியமான ஸ்பின்னர் உள்ளனர் என்று நான் நினைக்கவில்லை. மிகவும் கூர்மையான மனநிலை கொண்டனர்.

2-வதாக ஜடேஜாவை தேர்வு செய்வேன். ஆஃப் ஸ்பின்னர் தேவைப்பட்டால் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்யலாம். தற்போது தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள், நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது வேறு விசயம்.”

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports