ஐ.பி.எல் போட்டியில் குஜராத் அணி ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து 7வது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது.
அபிஷேக் சர்மா 42 பந்தில் 65 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), மர்க்கிராம் 40 பந்தில் 56 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) சான் சிங் 6 பந்தில் 25 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முகமது ஷமி 3
விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் விர்த்திமான் 38 பந்தில் 68 ரன்னும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), ராகுல் திவேதியா 21 பந்தில் 40 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ரஷீத்கான் 11 பந்தில் 31 ரன்னும் (4 சிக்சர்) எடுத்தனர்.
உம்ரான் மாலிக் 25 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி இந்த சீசனில் புதிய சாதனை படைத்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போய்விட்டது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் குஜராத் வென்றது. 22 ரன் தேவைப்பட்டது. ஜான்சென் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் திவேதியா சிக்சர் அடித்தார். 2வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில்
ரஷீத்கான் சிக்சர் அடித்தார். 4வது பந்தில் ரன் எடுக்கவில்லை.
இதனால் கடைசி 2 பந்தில் 9 ரன் தேவைப்பட்டது. 5வது பந்தில் ரஷீத்கான் மீண்டும் சிக்சர் அடித்தார். கடைசி பந்தில் 3 ரன் தேவை. ரஷீத்கான் கடைசி பந்திலும் சிக்சர் அடித்து அந்த அணியை
வெற்றிபெற வைத்தார். கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் (திவேதியா1, ரஷித்கான்3) அடிக்கப்பட்டது.
ஐதராபாத் அணியின் தொடர் வெற்றிக்கு குஜராத் முற்றுப்புள்ளி வைத்தது. அந்த அணி 3வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:
இது ஒரு அற்புதமான கிரிக்கெட் போட்டியாகும். 40 ஓவர்கள் முழுவதும் சிறப்பாக இருந்தது. வித்தியாசமான ஆட்டமாக இருந்தது. நாங்கள் நெருங்கி வந்துதான் தோற்றுள்ளோம். இதனால் நாங்கள்
நேர்மறையாக இருக்கிறோம். சிறந்த அணியிடம்தான் நாங்கள் தோற்றுள்ளோம். குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
ரஷீத்கான் ஏற்கனவே இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் மீண்டும் சிறப்பாக ஆடி உள்ளார். இந்த போட்டி மூலம் நாங்கள் ஏராளமான விஷயங்களை கற்றோம்.
ஆனால் அதே நேரத்தில் 2 சிறந்த அணிகள் மோதும் போது இது மாதிரி நடக்கலாம். கடைசி ஓவரை வீசிய ஜான்சென் மீண்டும் பலம் பெற்று திரும்புவார். இன்னும்நிறைய ஆட்டங்கள் இருக்கிறது.
ஐதராபாத் அணி அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை வருகிற 31ந் தேதி எதிர் கொள்கிறது.
குஜராத் அணி 7வது வெற்றியை பெற்றது. அதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. குஜராத் 9வது போட்டியில் பெங்களூரை 30ந் தேதி சந்திக்கிறது.