சிரஞ்சீவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் கோட்டா சீனிவாசராவ்

பிரபல தெலுங்கு வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழில் சாமி, திருப்பாச்சி, ஏய், சத்யம், சகுனி, தாண்டவம், மாசி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் நடத்திய விழாவில் பங்கேற்ற நடிகர் சிரஞ்சீவி, “நான் தயாரிப்பாளர் அல்ல. தொழிலாளிதான். சினிமா தொழிலாளர்களுக்காக ஆஸ்பத்திரி கட்ட போகிறேன்’’ என்று பேசினார். இது கோட்டா சீனிவாசராவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிரஞ்சீவியை கண்டித்து கோட்டா சீனிவாசராவ் அளித்துள்ள பேட்டியில், “திரைப்பட தொழிலாளர்கள் மூன்று வேளை உணவுக்கு கஷ்டப்படும் நிலையில் அவர்களுக்கு ஆஸ்பத்திரி கட்டுவேன் என்று சிரஞ்சீவி பேசுகிறார். இது தேவையற்றது. ஆஸ்பத்திரிக்கு பதிலாக சினிமா தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதுதான் முக்கியம். நானும் தொழிலாளிதான் என்று சிரஞ்சீவி சொல்கிறார். பல கோடிகளை சம்பளமாக வாங்குகிற அவர் எப்படி தொழிலாளி ஆனார்” என்றார். இந்த விமர்சனம் பரபரப்பாகி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools